/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர், மருந்தாளுனர் பணியிடங்கள் எம்.ஆர்.பி., வழியாக நிரப்ப திட்டம்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர், மருந்தாளுனர் பணியிடங்கள் எம்.ஆர்.பி., வழியாக நிரப்ப திட்டம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர், மருந்தாளுனர் பணியிடங்கள் எம்.ஆர்.பி., வழியாக நிரப்ப திட்டம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர், மருந்தாளுனர் பணியிடங்கள் எம்.ஆர்.பி., வழியாக நிரப்ப திட்டம்
ADDED : நவ 14, 2025 01:38 AM
விருதுநகர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) மூலமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர், மருந்தாளுனர், பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆகிய பணியிடங்கள் நலவாழ்வு சங்கங்கள் மூலமாக நேரடி தொகுப்பூதியத்தில் நிரப்ப மாவட்டங்கள் தோறும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
கொரோனாவின் போது பணிபுரிந்த செவிலியர்கள் பலரும் இதுவரை பணிநிரந்தரம் செய்யப்படாமல் தொடர்ந்து தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருவதால், அவர்களின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கொரோனாவில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியர், மருந்தாளுனர் பணியிடங்களை எம்.ஆர்.பி., வழியாக மட்டுமே நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான பணியாளர்களை நியமிக்க முடியாமல் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து செவிலியர்களின் கோரிக்கையின் படி கொரோனாவின் போது பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை எம்.ஆர்.பி., வழியாக தொகுப்பூதியத்தில் நியமிக்கவும், பணிநிரந்தரம் செய்யும் போது முன்னுரிமை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் எம்.ஆர்.பி., மூலமாக மட்டுமே செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பணியிடங்களை நிரப்பப்படும் என அரசு தரப்பு தெரிவித்து வழக்கை முடிக்க திட்டமிட்டுள்ளது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட அனைத்து மருத்துவ பணியாளர்களின் ஓட்டுக்களை பெற அரசு இம்முயற்சியில் இறங்கியுள்ளது.

