/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆவியூரில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு
/
ஆவியூரில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு
ADDED : ஜன 15, 2024 10:56 PM

காரியாபட்டி : ஆவியூரில் ரோட்டோரத்தில் போட்டி போட்டு ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காரியாபட்டி ஆவியூர் வழியாக மாங்குளம், அரசகுளம் குரண்டி, மேலக் கள்ளங்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
தினமும் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 5க்கும் மேற்பட்ட பஸ்கள் தலா 5, 6 முறை வந்து செல்லும். அத்துடன் ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆரம்பத்தில் இரு வாகனங்கள் விலகிச் செல்லும் அளவிற்கு ரோடு வசதி இருந்தது. தற்போது மெயின் ரோட்டில் இருந்து 1 கி. மீ., தூரம் வரை கடைகள் ஆக்கிரமித்துள்ளனர்.
கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, ஒரு வாகனம் கூட செல்ல முடியவில்லை. இதனை கடக்க குறைந்த பட்சம் 20 நிமிடம் ஆகின்றன. எதிர்பாராத விதமாக இரு வாகனங்கள் விலகிச் செல்ல நேரிடும் போது வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர்.
அரசு பஸ் டிரைவர்கள் உரிய நேரத்திற்கு பஸ்சை இயக்க முடியாமல் தவியாய் தவிக்கின்றனர். ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. விளம்பரத்திற்காக ரோட்டில் போர்டுகளை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க போட்டோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற பேரூராட்சி, போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.