/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெம்பக்கோட்டை அணையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
/
வெம்பக்கோட்டை அணையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
வெம்பக்கோட்டை அணையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
வெம்பக்கோட்டை அணையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஜன 04, 2024 01:42 AM

சிவகாசி; வெம்பக்கோட்டை அணை, வைப்பாற்றில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கரு வேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி வெம்பக்கோட்டையில் வைப்பாறு ஆற்றில் 1986 ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் உள்ள அணையில் 5 மதகுகள் உள்ளது. வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 ஹெக்டேர் பாசன வசதி உடையது.
அணையை சுற்றியுள்ள கிராம பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடைபெறுகிறது. அணை நிரம்பிய பின்னர் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும்.
சமீபத்தில் பெய்த மழைக்கு முழுமையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் அணையில் பெரும்பான்மையான இடங்களில் சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளது.
இதே போல் வைப்பாற்றிலும் இடைவெளியின்றி கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழை பெய்தாலும், அணை திறக்கப்பட்டாலும் தண்ணீர் ஓடி செல்ல வழி இல்லை. எனவே அணையிலும், வைப்பாற்றிலும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.