/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரியாதிகுளம் கண்மாய் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு
/
பெரியாதிகுளம் கண்மாய் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு
ADDED : நவ 21, 2024 04:12 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் பெரியாதிகுளம் கண்மாய் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தண்ணீர் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ராஜபாளையம் சஞ்சீவி மலை அடிவாரத்திலிருந்து புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள பெரியாதிகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து கால்வாய் அமைந்துள்ளது. சஞ்சீவி மலை தொடங்கி மலையடிப்பட்டியில் இருந்து வரும் கால்வாய் சங்கரன்கோவில் முக்கில் இருந்து ஐ.என்.டி.யூ.சி நகர் அருகே வரை வணிக நிறுவனங்களால் நடைபாதைக்கு என அணுகு சாலை என்ற பெயரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பத்தடி முதல் 30 அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்புகளால் அவசர காலங்களில் பராமரிப்பு செய்ய முடியாததுடன் கழிவுகளை அகற்ற முடிவதில்லை. நெடுஞ்சாலைத்துறை அருகே உள்ளதால் அணுகு சாலைக்கு வைப்புத்தொகை, தற்காலிக புதுப்பித்தல் தொகை இத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதுவரை உள்ள அணுகு சாலைக்கு இதற்கான எந்த விதிமுறையும் பின்பற்ற ப்படவில்லை என்றதுடன் 4 அடி வரை போடவேண்டிய அணுகு சாலை விதி மீறி ஓடையை ஆக்கிரமித்து 30 அடி வரை போட்டு வருவதை கண்காணிப்பதில்லை.
நகராட்சி, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நெடுஞ்சாலத்துறை கட்டுப்பாட்டில் இத்துறையினால் வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியை ரத்து செய்யும் பொருட்டு கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.