/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓடையை ஆக்கிரமித்து குவாரிக்கு பாதை; தண்ணீர் வர வழி இல்லாமல் விவசாயம் பாதிப்பு

ADDED : நவ 30, 2024 05:56 AM

சிவகாசி; சிவகாசி அருகே நதிக்குடியில் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குவாரிக்கு செல்லும் பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் சென்று வருவதால் தண்ணீர் செல்ல வழி இல்லாததால் விவசாயம் பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சிவகாசி அருகே நதிக்குடியில் தனியார் குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செல்லும் வழியில் நதிக்குடி செங்குளம் கண்மாய்க்கு செல்கின்ற 54 அடி அகலத்தில் நீர் வரத்து ஓடை உள்ளது. இந்தக் கண்மாயை நம்பி இப்பகுதியில் நெல், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள குவாரிக்கு வாகனங்கள் செல்வதற்காக ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு பாதையாக மாற்றப்பட்டுவிட்டது. இதனால் ஓடை அடைபட்டு மழை பெய்தாலும் தண்ணீர் வருவதற்கு வழி இல்லை. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வராமல் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பாண்டியன், விவசாயி: ஓடை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவித்தோம். வருவாய்த் துறையினர் வந்து நில அளவீடு செய்து ஓடை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை உறுதி செய்தனர். ஆனால் இதுவரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. தற்போது வரையிலும் ஓடையில் தான் குவாரி வாகனங்கள் சென்று வருகின்றது. இதனால் சமீபத்தில் மழை பெய்தும் ஓடையில் தண்ணீர் வரவில்லை. எனவே உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.