/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏழாயிரம் பண்ணையில் ஆக்கிரமிப்பு
/
ஏழாயிரம் பண்ணையில் ஆக்கிரமிப்பு
ADDED : டிச 06, 2024 04:57 AM
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை தெருக்களில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏழாயிரம்பண்ணை ஊராட்சியில் கே.கே., நகர், அரண்மனை தெரு, மேலத் தெரு, கீழத்தெரு, ராஜீவ் காந்தி நகர் தேவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு வரை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இந்தப் பகுதிகளில் ரோடு வரை ஆக்கிரமித்து கட்டடங்கள் வாசல்படிகள், ஏணிப்படிகள் கட்டப்பட்டு உள்ளதால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் ஆட்டோ கார் போன்ற வாகனங்கள் கூட தெருவுக்குள் வர முடியாத நிலை உள்ளது.
ஆறு அடி அகலம் இருந்த தெருக்கள் தற்போது மூன்று அடி அகலமாகவும் 20 அடி அகலம் இருந்த ரோடுகள் தற்போது 10 அடிரோடாகவும் மாறிவிட்டன. ஊராட்சியில் இருந்து வாறுகால் கட்டவும்,புதியதாக தெரு விளக்கு அமைக்க மின் கம்பம் நடவும் போதுமான இடமின்றி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
அவசர காலத்தில் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத வகையில் ரோடுகள் மிக குறுகலாக காணப்படுகின்றன. வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஊராட்சியில் உள்ள தெருக்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும்.