/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பு, புதர் மண்டி கிடக்கும் நீர்வரத்து ஓடைகள்
/
ஆக்கிரமிப்பு, புதர் மண்டி கிடக்கும் நீர்வரத்து ஓடைகள்
ஆக்கிரமிப்பு, புதர் மண்டி கிடக்கும் நீர்வரத்து ஓடைகள்
ஆக்கிரமிப்பு, புதர் மண்டி கிடக்கும் நீர்வரத்து ஓடைகள்
ADDED : ஆக 05, 2025 05:22 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் ஆக்கிரமிப்புகளால் சுருங்கியும், கழிவுகளால் புதர் மண்டி காணப்படும் நீர்வரத்து ஓடைகளை சீரமைக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பேயனாறு, காயல்குடி ஆறு நீர்வரத்து ஓடைகள் வழியாக பெரியகுளம், வடமலைக்குறிச்சி, படிக்காசு வைத்தான் பட்டி கண்மாய்கள் வழியாக சிவகாசி வரை பல்வேறு கண்மாய்க்கு தண்ணீர் வரத்து ஏற்படுகிறது.
இதேபோல் வத்திராயிருப்பு தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தும், பிளவக்கல் அணையில் இருந்தும் வெளியேறும் தண்ணீர் கூமாபட்டி, வத்திராயிருப்பு, சுந்தர பாண்டியம், நத்தம்பட்டி வழியாக சிவகாசி தாலுகா கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்கிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகிறது.
இந்த நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், வீடுகள், வணிக நிறுவனங்களின் கழிவுகள் கொட்டப்பட்டும், ஆளுயரத்திற்கு கோரை புற்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் கனமழை நேரத்தில் கரையோர குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.