/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அலுவலகங்களில் தேவை மின் சிக்கனம்
/
அலுவலகங்களில் தேவை மின் சிக்கனம்
ADDED : ஜூலை 08, 2025 01:13 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் வீணாக ஓடும் மின்விசிறியாலும் எரியும் மின் விளக்குகளாவலும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் அலுவலர்கள் இல்லாத நிலையிலும் பெரும்பான்மையான நேரங்களில் அவர்களது அறையில் மின்விசிறி வீணாக ஓடுகிறது. மின் விளக்குகளையும் அணைப்பதில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் அதிகாரி இல்லாத நிலையில் இந்நிலை தான் உள்ளது.
இதனால் மின்சாரம் வீணாகிறது. தங்கள் வீடுகளில் மின்சார சிக்கனத்தை கடைபிடிக்கும் அதிகாரிகள் அலுவலகத்தில் கடைபிடிப்பதில்லை. முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு அலுவலகத்திலேயே இந்நிலை உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.