/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அமலாக்கத்துறை விசாரணை நயினார் நாகேந்திரன் விளக்கம்
/
அமலாக்கத்துறை விசாரணை நயினார் நாகேந்திரன் விளக்கம்
அமலாக்கத்துறை விசாரணை நயினார் நாகேந்திரன் விளக்கம்
அமலாக்கத்துறை விசாரணை நயினார் நாகேந்திரன் விளக்கம்
ADDED : மே 23, 2025 12:11 AM
ராஜபாளையம்: ''டாஸ்மாக் முறைகேடு குறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை விசாரணை செய்தது'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது: தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலேயே டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இதற்கு உச்சநீதிமன்றம் தடைவித்துள்ளது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது.
சிவகாசி பட்டாசு தொழில் வலுவடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மத்திய அரசு எடுக்கும். விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க முதல்வரும் கைத்தறித்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.