/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டம்: விருதுநகரில் வாணவேடிக்கை
/
ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டம்: விருதுநகரில் வாணவேடிக்கை
ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டம்: விருதுநகரில் வாணவேடிக்கை
ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டம்: விருதுநகரில் வாணவேடிக்கை
ADDED : ஜன 01, 2025 01:16 AM

விருதுநகர் ; ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும் பட்டாசு ஆலைகளின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக நேற்று இரவு 8:00மணி முதல் விருதுநகர் -மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ்.,ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாண வேடிக்கை நிகழ்வுநடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை மக்களுக்கு காட்சிப்படுத்தினர்.
பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா எனபல்வேறு வண்ணங்களில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கை காட்டப்பட்டது. வானத்தில் உயரே 300 அடி உயரம் சென்று பரவலாக அரை மணி நேரத்திற்கும் மேல் பேன்சி ரக பட்டாசுக்கள் வெடிக்கப்பட்டன. கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், சோனி பயர் ஒர்க்ஸ்,அணில் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் செய்தனர். தீயணைப்புத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.