/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நுழைவுத்தேர்வு விழிப்புணர்வு 0.1 சதவீத மாணவர்களுக்கு கூட இல்லை கலெக்டர் தகவல்
/
நுழைவுத்தேர்வு விழிப்புணர்வு 0.1 சதவீத மாணவர்களுக்கு கூட இல்லை கலெக்டர் தகவல்
நுழைவுத்தேர்வு விழிப்புணர்வு 0.1 சதவீத மாணவர்களுக்கு கூட இல்லை கலெக்டர் தகவல்
நுழைவுத்தேர்வு விழிப்புணர்வு 0.1 சதவீத மாணவர்களுக்கு கூட இல்லை கலெக்டர் தகவல்
ADDED : டிச 28, 2024 06:26 AM
விருதுநகர் : நுழைவு தேர்வுகள் எழுதுவது குறித்த விழிப்புணர்வு 0.1 சதவீத மாணவர்களுக்கு கூட இல்லை என விருதுநகரில் நடந்த அரசு, உதவி பெறும் பிளஸ் 1, 2 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது: கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் குறித்து ஆய்வு செய்தால் அதில் ஒரு சில மாணவர்கள் மிக சிறப்பான வேலையில் இருக்கிறார்கள்.
மற்றவர்கள் சாதாரணமாக வேலையில் இருக்கிறார்கள். சிறப்பான வேலையில் இருக்கிறவர்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்தால் அந்த மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு பெற்றவர்களாகவே இருந்திருப்பர்.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்த மாணவர்கள் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளை எழுதுகின்றனர்.
இது போன்ற நுழைவு தேர்வுகள் எழுதுவது குறித்த விழிப்புணர்வு 0.1 சதவீத மாணவர்களுக்கு கூட இல்லை. உங்கள் அனைவராலும் அதிகமான மதிப்பெண்கள் எடுக்க முடியும்.
தற்போது இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த வாய்ப்புகளை எல்லாம் நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்களுக்கு அடுத்து வரக்கூடிய ஐந்து ஆண்டுகள் என்பது உங்கள் வாழ்வில் மிக முக்கியமானது.
நீங்கள் என்ன படிப்பு படிக்க போகிறீர்கள், எங்கு படிக்க போகிறீர்கள் என்பது மிக முக்கியம். இந்திய அளவில் ஒன்றிய மாநில அரசுகள் ஆயிரக்கணக்கான கோடிகளை உயர்கல்விக்கு வழங்குகின்றனர், என்றார்.
உலகளாவிய வாய்ப்புகள், படிப்புகள், கல்லூரிகள், வேலைவாய்ப்புகள் குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் பேசினார்.

