/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூட்டணியில் இருந்தும் அரசுக்கு நெருடல் தரும் பிரச்னையை கையில் எடுத்துள்ளோம்: வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேட்டி
/
கூட்டணியில் இருந்தும் அரசுக்கு நெருடல் தரும் பிரச்னையை கையில் எடுத்துள்ளோம்: வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேட்டி
கூட்டணியில் இருந்தும் அரசுக்கு நெருடல் தரும் பிரச்னையை கையில் எடுத்துள்ளோம்: வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேட்டி
கூட்டணியில் இருந்தும் அரசுக்கு நெருடல் தரும் பிரச்னையை கையில் எடுத்துள்ளோம்: வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேட்டி
ADDED : செப் 23, 2024 02:13 AM
விருதுநகர்: தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு நெருடலை ஏற்படுத்தும் மதுவிலக்கு பிரச்னையை கையில் எடுத்துள்ளோம் என விருதுநகரில் வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது.
1954ல் அமைக்கப்பட்ட மது விலக்கு ஆலோனை குழு பரிந்துரையை ஏற்றுமத்திய அரசு கொள்கை வரையறுத்து தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசும் மது விலக்கை முழுமையாகநடை முறைப்படுத்த வேண்டும்.
மதுவை வைத்து வி.சி.க., அரசியல் செய்கிறதுஎன மத்திய அமைச்சர் முருகன் கூறுவது தவறு. பா.ஜ., ஆளும் உத்திரபிரதேசத்தில் மது விலக்கு அமலில் இல்லை. குஜராத் மாநிலத்தில் மது விலக்கு காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. பீஹாரில் மது விலக்கிற்கு முதல்வர் நிதிஷ்குமார் காரணம். ஹிந்துக்களின் பாதுகாவலர்கள் என கூறும் பா.ஜ., வைச் சேர்ந்தவர்கள் ஹிந்து சமூகத்தின் இளம் தலைமுறையினரை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாநில அரசுகளின் மீது பழி போட்டு விட்டு கண்டும் காணாமலும் உள்ளனர். தமிழகத்தில் வி.சி.க., தற்போது தி.மு.க., கூட்டணியில் இருந்தும், அரசுக்கு நெருடலை ஏற்படுத்தும் முக்கியமான மதுவிலக்கு பிரச்னையை கையில் எடுத்துள்ளது.
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளை கடந்தும் தமிழக மீனவர்களை பாதுகாக்கும் முயற்சிகளை செய்யவில்லை. காங். ஆட்சியில் இருந்ததை விட தற்போது மீனவர்களின் பிரச்னை அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு போதைப்பொருள் புழக்கத்தை தமிழர்கள் பகுதியில் பரப்புகின்றனர்.
இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே, பிரேமதாசா ஆகியோரின் வாரிசுகளுக்கு சிங்களர்கள் ஆதரவு அளிக்கவில்லை. குமார திசநாயகே தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் மூலம் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர நினைக்கின்றனர்.
எதிர்கட்சிகள் இல்லாத தேசம், ஒரு கட்சி, ஒரு ஆட்சியை நடை முறைப்படுத்த முயற்சிக்கின்றனர் என்றார்.