ADDED : செப் 07, 2025 02:50 AM

விருதுநகர்,: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் விருதுநகர், காரியாபட்டி, சுற்றியபகுதிகளில் மாலையில் பெய்த மழையால் பகல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை மாறியது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்தம் அதிகமாக இருப்பதால் பகல் வெயிலில் சுபநிகழ்ச்சிகளுக்கு மக்கள் வெளியே சென்று வரும் நிலை உள்ளது.
நேற்று காலை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் மழை மேக மூட்டம் உருவானது.
அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசியில் மழை மேகங்கள் மட்டுமே தென்பட்டது.
ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையத்தில் மழை இல்லை. ஆனால் விருதுநகர், காரியாபட்டி, மல்லாங்கிணர், அதனை சுற்றியபகுதிகளில் நேற்று மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் பகல் வெப்பம் தணித்து குளிர்ச்சியான சூழ்நிலை மாறியது.