/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒவ்வொரு பணியும் வெற்றிக்கான திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்
/
ஒவ்வொரு பணியும் வெற்றிக்கான திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்
ஒவ்வொரு பணியும் வெற்றிக்கான திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்
ஒவ்வொரு பணியும் வெற்றிக்கான திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்
ADDED : பிப் 23, 2024 05:34 AM
சிவகாசி : ''நாம் செய்கின்ற ஒவ்வொரு பணியும் வெற்றிக்கான சரியான திட்டத்தையும் செயல்படுத்தலையும் கொண்டிருக்க வேண்டும்.'' என தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.
சிவகாசி மெப்கோ சிலெங்க் பொறியியல் கல்லுாரியில், கல்லுாரி நிர்வாகம், மதுரை என்.எம்.எஸ்., ராஜா கே.எஸ்.பி., கணேசன் அகாடமி சார்பில் இந்திய சிவில் சர்வீசஸில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
டாக்டர் கனகராஜ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அறிவழகன் தலைமை வகித்தார். என்.எம்.எஸ்., ராஜா கே.எஸ்.பி., கணேசன் அகாடமி நிர்வாகி மணிமாறன் முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்ற தமிழக முன்னாள் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு பேசியதாவது, எந்த ஒரு பணியையும் முறையாக செய்ய திட்டமிடுதல் அவசியம். நாம் செய்கின்ற ஒவ்வொரு பணியும் வெற்றிக்கான சரியான திட்டத்தையும் செயல்படுத்தலையும் கொண்டிருக்க வேண்டும்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு முயற்சிக்கும் ஆயிரம் நபர்களுக்கு தமிழ்நாடு அரசு 10 மாதத்திற்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ஐ.ஏ.எஸ், தேர்வுக்கான பாடத்திட்டம் தேர்வு முறை தகுதிக்கான அளவுகோல்கள், மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் குறித்து விளக்கினார். மாணவர் ஆதிஷ் குமார் நன்றி கூறினார்.