ADDED : மார் 20, 2025 01:39 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பதக்கம், ஈயம் கண்டெடுக்கப்பட்டது.
இங்கு நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 22 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 4100 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம், ஈயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
அந்த பகுதியில், 87 செ.மீ., ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம், இரும்பு கிடைத்துள்ளது. முதல்முறையாக 102 செ.மீ., ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.