/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி கடைகளில் அத்துமீறி வசூல்
/
நகராட்சி கடைகளில் அத்துமீறி வசூல்
ADDED : ஆக 05, 2025 05:21 AM
விருதுநகர் : விருதுநகர் மெயின் பஜாரில் குறுக்கு தெருக்களில் அமைந்துள்ள கடைகளில், அதன் முன்பு சாலையோர கடைகள் இருந்தால் அத்துமீறி ஏலதாரர்கள் வசூலிப்பதாக வியாபாரிகள் நகராட்சியிடம் புகார் மனு அளித்தனர்.
விருதுநகர் மெயின் பஜார் குறுக்குத் தெருக்களில் அமைந்துள்ள கடைகளில், அதன் முன் சாலையோர வியாபாரிகள் சிறு கடை போட்டால், அவர்களிடமும், வியாபாரி களிடமும் ஏலதாரர்கள் அத்துமீறி வசூலிப்பதாக நேற்று நகராட்சி தலைவர் மாதவனிடம் மனு அளித்தனர். அங்கு வந்த எம்.எல்.ஏ., சீனிவாசனிடமும் முறையிட்டனர். லட்சக்கணக்கில் முன்தொகை போட்டு, வாடகை செலுத்தி வருகிறோம். கூடுதல் பணம் கேட்டால் என்ன செய்வது என்றனர். இனிமேல் இது போல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.