ADDED : மார் 29, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் கே.வி.எஸ்., பொருட்காட்சி துவங்கியது.
வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து துவங்கி வைத்தனர்.
எம்.எல்.ஏ., சீனிவாசன்,நகராட்சி தலைவர் மாதவன், கே.வி.எஸ்., மேனேஜிங் போர்டு தலைவர் செல்வ கணேஷ், உப தலைவர் சின்னக்கண், செயலாளர் முரளிதரன், பொருளாளர் ரத்தினவேல் பங்கேற்றனர்.
மார்ச் 28 முதல் ஏப். 20 வரை நடக்கும் பொருட்காட்சியில் கலை நிகழ்ச்சிகள், மீன் கண்காட்சி, சீனா கொலம்பஸ் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகள் தினம் தோறும் நடத்தப்படும். பொருட்காட்சி ஒருங்கிணைப்பு பணிகளை ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், மாணிக்கவேல், பாலாஜி, கண்ணபிரான் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

