/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜய கரிசல்குளத்தில் மீண்டும் கண்காட்சி துவக்கம்
/
விஜய கரிசல்குளத்தில் மீண்டும் கண்காட்சி துவக்கம்
ADDED : பிப் 12, 2025 06:36 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளத்தில் முதல் கட்ட அகழாய்வில் 3253, இரண்டாம் கட்ட அகழாய்வில் 4500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. தற்போது மூன்றாம் கட்ட பணிகள் நடந்து வருகின்றது.
இரு கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் 2024 நவ.ல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் கண்காட்சி துவங்கியது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிடுவதோடு கண்காட்சியினையும் பார்வையிட்டனர். அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், நேற்று முதல் மீண்டும் கண்காட்சி துவங்கியுள்ளது.
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும். விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் பள்ளி கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு பார்வையிடுவதற்கு வருகின்றனர், என்றார்.