UPDATED : ஆக 19, 2026 05:05 PM
ADDED : ஆக 19, 2026 04:53 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கான காளீஸ் ஸ்பெக்ட்ரம் எக்ஸ்போ 2026 என்ற தலைப்பில் இரு நாட்கள் பல்துறை ஒருங்கிணைந்த கண்காட்சி நடந்தது. கல்லுாரி செயலர் செல்வராஜன் துவக்கி வைத்தார்.
இணைச் செயலர் ராஜேஷ், முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். கல்லுாரி மாணவர்களின் படைப்பாற்றல், புதுமை சிந்தனை, பல்துறை திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், நிர்வாகம், கலை, மொழி உள்ளிட்ட பல்துறைகளை ஒருங்கிணைந்து கண்காட்சி வைக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள 19 பள்ளிகளைச் சேர்ந்த 2200 மாணவர்கள், 38 ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
