ADDED : ஆக 19, 2026 05:01 PM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
இன்று(ஆக. 20) முதல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடக்கிறது. பாடவாரியான பயிற்சிகள், தேர்வு நுணுக்கங்கள், வினா அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். மேலும், தேர்வர்களின் தொடர் தயாரிப்பிற்கு உதவும் வகையில் இலவச வை–பை வசதியுடன் கூடிய நுாலகம், கணினி வசதிகள் அலுவலகத்தில் உள்ளன. பயிற்சியின் ஒரு பகுதியாக இலவச பாட வாரியானத் தேர்வுகள், முழுமாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வர்களின் முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்படும். பங்கேற்க விரும்புவோர் studycirclevnr@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
