UPDATED : நவ 02, 2026 03:59 PM
ADDED : நவ 02, 2026 03:54 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக சமூக நலப் பணித்துறை சார்பில் உலக மனநல தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி, வேந்தர் அறிவழகி தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியை துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், பேராசிரியர்கள் பார்வையிட்டனர். துணைத் தலைவர் அந்தோணி ராஜ் தலைமையில் மாணவர்கள் தங்கள் படைப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
ஏற்பாடுகளை பேராசிரியர் சுமாமணி, மாணவர்கள் சுபைதா பானு, கோகிலா செய்திருந்தனர்.
