/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சி.சி.டி.வி., கேமராக்கள் செயல்பாட்டில்இருப்பதை உறுதிப்படுத்த எதிர்பார்ப்பு
/
சி.சி.டி.வி., கேமராக்கள் செயல்பாட்டில்இருப்பதை உறுதிப்படுத்த எதிர்பார்ப்பு
சி.சி.டி.வி., கேமராக்கள் செயல்பாட்டில்இருப்பதை உறுதிப்படுத்த எதிர்பார்ப்பு
சி.சி.டி.வி., கேமராக்கள் செயல்பாட்டில்இருப்பதை உறுதிப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : அக் 29, 2024 04:38 AM
விருதுநகர்: விருதுநகரில் அடிக்கடி திருட்டு, குற்றச்சம்பவங்கள் நடக்கும் இடங்களில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் செயல்பாட்டில் இருப்பதையும், பழுதானவற்றை சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர், அதனை சுற்றியப்பகுதிகளில் டூவீலர், நகை, வழிப்பறி திருட்டுகள் தொடர்ந்து நடந்து வந்ததால் குற்றவாளிகளை அடையாளம் காணவும், குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுப்பதற்காகவும் முக்கிய வீதிகள், ரோடு, தெரு முனைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டது.
ஆனால் இவற்றை முறையாக பராமரிக்காததால் அநேக இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பழுதாகிய நிலையில் உள்ளது.
இதனால் சரியான காட்சிப் பதிவுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு தனியார் இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்களை ஆய்வு செய்து காட்சிப்பதிவுகளை கண்டறிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தீபாவளி நெருங்குவதால் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு வரும் குற்றவழக்குகளில் தொடர்பு உடையவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அசம்பாவிதத்தில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் போது சி.சி.டி.வி., கேமராக்களை தேடி அலைவதை முன் கூட்டியே தடுப்பதற்காக பழுதான கேமராக்களை சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.