/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரேஷன் பொருட்கள்
/
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரேஷன் பொருட்கள்
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரேஷன் பொருட்கள்
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரேஷன் பொருட்கள்
ADDED : பிப் 11, 2025 07:45 AM
விருதுநகர் : தமிழகத்தில் கணவனால் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முறிவுற்று அல்லது தனியாக வசிக்கும் பெண்களில் விவாகரத்து சான்று இல்லாதோருக்கும் ரேஷனில் பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும்.
குடும்ப வன்முறையால் ஆதரவற்ற நிலையில் வசிக்கும் பெண் தனி நபராக வசித்து வருவதாக தெரிவித்து, ஆதார் விபரத்துடன் இணையதளத்தில் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தால் அவருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும். கணவரால் கைவிடப்பட்டு அவரது ஆதார் கணவர் வைத்திருக்கும் ரேஷன் கார்டில் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கான உணவு பொருள் ஒதுக்கீடு கணவரால் பெறப்படுவது சரியல்ல.
ரேஷன் கார்டில் மனைவியின் பெயரை நீக்குவதற்கு கணவர் முன்வராத நிலையில் பெண், குழந்தைகள் தனியாக வசித்து வந்தால் குடும்ப தலைவரின் அனுமதியில்லாமல் பெயரை நீக்கி புதிய கார்டு வழங்கலாம்.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் வழங்க நிர்பந்தப்படுத்தக்கூடாது என அரசின் வழிகாட்டு உள்ளது. ஆனால் இது குறித்து விழிப்புணர்வு இல்லை.
மக்கள் குறைதீர் கூட்டங்களில் பெண்கள், கணவர் ஆதரவின்றி வசிப்பதால் ரேஷன் பொருட்கள் கூட குழந்தைக்கு வாங்க வழியில்லாமல் வாடுவதாக புகார் மனுக்கள் அளிக்கின்றனர்.
எனவே ஆதரவற்ற பெண்களுக்கு ரேஷன் வினியோகம் முறையாக வழங்கப்படுகிறதா என அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

