/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் சமுதாயக்கூடம் புதியதாக கட்டித்தர எதிர்பார்ப்பு
/
இடியும் நிலையில் சமுதாயக்கூடம் புதியதாக கட்டித்தர எதிர்பார்ப்பு
இடியும் நிலையில் சமுதாயக்கூடம் புதியதாக கட்டித்தர எதிர்பார்ப்பு
இடியும் நிலையில் சமுதாயக்கூடம் புதியதாக கட்டித்தர எதிர்பார்ப்பு
ADDED : ஜன 18, 2024 05:27 AM

சாத்துார்: சாத்துார் அருகே வாழவந்தாள் புரத்தில் இடியும் நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை அகற்றிவிட்டு புதிய சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியம் கத்தாழம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாழ வந்தாள்புரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடத்தில் கிராமத்தினர் திருமணம், காதுகுத்து ,சடங்கு விசேஷ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சமுதாய கூடத்தை பராமரிக்காததல் சுவர்கள் பலவீனமான நிலையில் காணப்படுகின்றன. மேலும் சுவற்றில் செடிகளும் மரங்களும் முளைத்து சுவர் விரிசல் கண்டு வருகிறது. தரைத்தளம் மற்றும் மேல் பூச்சு இடிந்து விட்ட நிலையில் பராமரிப்பு இன்றி பாழடைந்த கட்டடம் போல் சமுதாயக்கூடம் காணப்படுகிறது.
மேலும் இரவு நேரத்தில் மது பிரியர்கள் சமுதாயக்கூடத்தை பாராக மாற்றி வருகின்றனர். சுவர்கள் பலமிழந்து சேதமடைந்து விட்ட நிலையில் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
சேதமடைந்த சமுதாயக்கூடத்தை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் மின் இணைப்பு, தண்ணீர் வசதியுடன் சமுதாய கூடம் எம் .எல். ஏ., அல்லது எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.