/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லாங்கிணர் ரோட்டில் வாரச்சந்தை மாற்று இடம் தேர்வு செய்ய எதிர்பார்ப்பு
/
மல்லாங்கிணர் ரோட்டில் வாரச்சந்தை மாற்று இடம் தேர்வு செய்ய எதிர்பார்ப்பு
மல்லாங்கிணர் ரோட்டில் வாரச்சந்தை மாற்று இடம் தேர்வு செய்ய எதிர்பார்ப்பு
மல்லாங்கிணர் ரோட்டில் வாரச்சந்தை மாற்று இடம் தேர்வு செய்ய எதிர்பார்ப்பு
ADDED : நவ 04, 2024 05:28 AM
காரியாபட்டி : மல்லாங்கிணரில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை ரோட்டில் நடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்து அச்சம் உள்ளது. மாற்று இடம் தேர்வு செய்து வாரச்சந்தை நடத்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மல்லாங்கிணரில் தனியார் நிறுவனம் சார்பாக வெள்ளிக்கிழமை தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெறுகிறது. சுற்றி உள்ள விவசாயிகள் தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகளை இங்கு நடைபெறும் சந்தையில் விற்க வசதியாக இருக்கிறது. ஏராளமான வியாபாரிகளும் இங்கு கடை விரிகின்றனர். அதேபோல் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் காய்கறிகளை வாங்க கூடுகின்றனர்.
விருதுநகர் - கல்குறிச்சி ரோட்டில் வாரச்சந்தை நடைபெறுகிறது. ரோட்டோரத்தில் காய்கறிகள், தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனைக்கு விரித்து வைத்துள்ளனர். மக்கள் ஆர்வத்துடன் காய்கறிகளையும், தின்பண்டங்களையும் வாங்குகின்றனர். ரோட்டில் நின்று வாங்குவதால், வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை கடக்க வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ரோட்டில் அஜாக்கிரதையாக நின்று மக்கள் பொருட்களை வாங்குவதால், விபத்து அச்சம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மக்களுக்கு பாதுகாப்பாகவும், அதேசமயம் போக்குவரத்திற்கு இடையூறு இன்றியும் வாரச்சந்தை நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு தேவையான மாற்று இடத்தை தேர்வு செய்து வாரச்சந்தை நடத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.