/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கோட்டை--மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க எதிர்பார்ப்பு
/
செங்கோட்டை--மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க எதிர்பார்ப்பு
செங்கோட்டை--மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க எதிர்பார்ப்பு
செங்கோட்டை--மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 19, 2025 02:18 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:செங்கோட்டையிலிருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும் பாசஞ்சர் ரயிலை தேனி மாவட்டம் போடி வரை நீட்டிக்க வேண்டுமென நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை - -போடி ரயில்வே வழித்தடம் அகல ரயில் பாதையாக்கப்பட்டு இந்த வழித்தடத்தில் தற்போது மதுரையிலிருந்து தினமும் காலை 8:20 மணிக்கு புறப்பட்டு உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக போடி சென்று திரும்பும் வகையில் ஒரு ரயில் இயங்கி வருகிறது.
மேலும் வாரத்தில் 3 நாட்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து போடிக்கு ஒரு ரயில் இயங்கி வருகிறது.
நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் தேனி மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும், மூணாறு, குமுளி, போன்ற கேரள நகரங்களிலும் வசித்து வருகின்றனர். இதனால் போடியில் இருந்து தங்கள் மாவட்ட நகரங்களுக்கு ரயில் சேவையை எதிர்பார்க்கின்றனர்.
செங்கோட்டையில் மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மதுரை செல்லும் ரயிலை, அங்கிருந்து 5:00 மணிக்கு புறப்பட்டு இரவு 7:00 மணிக்கு போடியை சென்றடையும் வகையிலும், மறு மார்க்கத்தில் அதிகாலை 5:00 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு 7:00 மணிக்கு மதுரை வந்து வழக்கம் போல் 7 :25 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் வகையில் தடநீட்டிப்பு செய்து இயக்கினால் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.
மதுரைக்கு மாலை 4:15 மணிக்கு வரும் திருச்செந்தூர் -பாலக்காடு, மாலை 4:45 மணிக்கு வரும் திருவனந்தபுரம் -திருச்சி ரயில்களுக்கும், இணைப்பு ரயிலாகவும் இந்த ரயில் விளங்கும். திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களும் பயனடைவார்கள்.
எனவே, செங்கோட்டை- - மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

