/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கால்நடை ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க எதிர்பார்ப்பு
/
கால்நடை ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க எதிர்பார்ப்பு
கால்நடை ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க எதிர்பார்ப்பு
கால்நடை ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 05, 2026 04:15 AM
விருதுநகர்: தமிழகத்தில் கால்நடை ஆம்புலன்ஸ்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குநிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர்.
தமிழகத்தில் 1962 என்ற அலைபேசி எண்ணை கொண்ட ஆம்புலன்ஸ்கள்,நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த கால்நடைகள், செல்லப் பிராணிகளுக்கு வீட்டு வாசலில் பராமரிப்பு, சிகிச்சை, அவசரத் தேவை என்றால் கால்நடை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்குகின்றனர். இது 2016---17 அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மருத்துவருக்கு ரூ.50 ஆயிரம்,உதவியாளருக்கு 13 ஆயிரம், டிரைவருக்கு ரூ.13 ஆயிரத்து 500 ஊதியம் தனியார் ஏஜன்சி மூலம் வழங்க நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போதுகுறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. இது குறித்து நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. கிட்டதட்ட இந்த திட்டத்தை செயல்படுத்தி இந்த நிதியாண்டோடு 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. இப்படிப்பட்ட சூழலில் இதுவரை ஊதிய உயர்வு வழங்கவே இல்லை. தற்போதைய பொருளாதார சூழலில், விலைவாசி உயர்வு அதிகம் உள்ள நிலையில் ஊதியம் போதுமானதாக இல்லை.
இவர்களுக்கென தனிப்பட்ட முறையில் சங்கம் எதுவுமில்லை. இதனால் இவர்களது கோரிக்கைக்கு பெரிய அளவில் அரசு செவிசாய்ப்பதில்லை. 10 ஆண்டுகளாக ஒரே ஊதியத்தில் பணிபுரியும் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.இதில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கால்நடை ஆம்புலன்ஸ் அனைத்து நிலை பணியாளர்கள் எதிர்பார்க்கின்ற னர்.

