/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்டசபை தேர்தல் த.வெ.க.,வுக்கு பாடங்களை கற்றுத்தரும்: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
/
சட்டசபை தேர்தல் த.வெ.க.,வுக்கு பாடங்களை கற்றுத்தரும்: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
சட்டசபை தேர்தல் த.வெ.க.,வுக்கு பாடங்களை கற்றுத்தரும்: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
சட்டசபை தேர்தல் த.வெ.க.,வுக்கு பாடங்களை கற்றுத்தரும்: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
ADDED : ஜன 05, 2026 04:19 AM
சிவகாசி: ''வரும் சட்டசபை தேர்தல் த.வெ.க.,வுக்கு பாடங்களை கற்றுத்தரும் ''என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சிவகாசியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
காமராஜர் மற்றும் நாடார் சமூகம் குறித்து அவதுாறாக பேசிய யுடியூப்பர் முக்தாரை கைது செய்ய வேண்டும்.
சாத்துாரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்.
காந்திக்கும், அவரது புகழுக்கும் பெருமை சேர்ப்பது பா.ஜ., 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 125 நாளாக உயர்த்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் 150 நாளாக உயர்த்தப்படும்.
அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் திட்டம் ஏமாற்று வேலையாக தெரிகிறது. அவர்களை விருந்துக்கு அழைத்து தி.மு.க., அரசு வெந்நீர் ஊற்றியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என பழனிசாமி கூறிய பின்னரே தற்போது ரூ.3 ஆயிரம் அறிவித்து உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி வந்த உடன் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். காங்கிரஸ் கட்சி எப்படி உள்ளது என ஜோதிமணி எம்.பி., கூறி விட்டார். அ.தி.மு.க., யாருக்கும் அடிமை கிடையாது. பொங்கல் முடித்த பின்னர் எங்கள் கூட்டணிக்கு யார் யாரெல்லாம் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது தெரியவரும். வரும் சட்டசபை தேர்தல் த.வெ.க.,வுக்கு பாடங்களை கற்றுத்தரும். சிறுபான்மையினர் ஓட்டுக்கள் எங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்றார்.
100 சதவீத வளர்ச்சி முன்னதாக கட்சி ஆலோசனை கூட்டத்தில் அவர் நிர்வாகிகளிடம் பேசியதாவது: பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., 100 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. களத்தில் அ.தி.மு.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் இடையே தான் போட்டி. நாம் நினைக்கின்ற கூட்டணியை பொதுச் செயலாளர் அமைக்க உள்ளார். தி.மு.க., ஆட்சியாளர்களால் என் மீது பல்வேறு வழக்குகள் ,நெருக்கடிகள் வந்த போது, அ.தி.மு.க.,வையும் தலைமையையும் விட்டுக் கொடுத்து பேசியது கிடையாது. நாம் மட்டுமல்ல தமிழக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வரலாறு, வெளிச்சமான தலைவர் என கூறுபவர்களுக்கு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் பலம் உள்ளதா. பூத் கமிட்டி அமைப்பே இல்லாத சிலர் சித்து விளையாட்டு விளையாடி வருகின்றனர். திரையில் பார்த்தவர்களை நேரில் பார்க்க ஆசைப்படுவது இயல்பு. யார் வந்தாலும் கூட்டம் கூடும்.
இவ்வாறு பேசினார்.

