/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேரிடர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியான வசதிகள் செய்து தரப்படுகிறதா தாசில்தார்களுக்கு பயிற்சி அளிக்க எதிர்பார்ப்பு

ADDED : ஜன 05, 2025 04:59 AM
விருதுநகர் :  தமிழகத்தில் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் நேரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுவது குறித்து தாசில்தார்களுக்கு பயற்சி அளிக்க சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புயல், மழை  வெள்ள பேரிடரால் திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடும் வெள்ள பாதிப்பை சந்தித்து வந்துள்ளன. பேரிடர் ஏற்படும் போது கூடுதல் ஆபத்துக்கு ஆளாகிறவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான்.
அவர்களை வெளியில் கொண்டு வருவதற்கு, பாதுகாப்பான இடம் அளிப்பதற்கான வேலையை அரசு செய்ய வேண்டும். ஆனால் சரியான சட்டபுரிதல் இல்லாததல் அவர்களுக்கான எவ்வித வசதிகளும்  செய்து கொடுப்பதில்லை.
இது குறித்து ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் இந்திய செயல் தலைவர் நம்புராஜன் கூறியதாவது: பேரிடர் மேலாண்மை துறை  வருவாய்த்துறை கீழ் தான் வருகிறது.
எந்த தாசில்தார் அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு, உரிமைகள் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு இல்லை. இந்த மாதிரி நேரங்களில் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பது அரசின் முன்னுரிமை பணி என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் பிரிவு 8 கூறுகிறது.
பாதுகாப்பாக வைக்கக் கூடிய பள்ளிக்கூடம், ரேஷன் கடை, சமுதாய கூடம் போன்ற முகாம் இடங்களில் வெஸ்டர்ன் டாய்லெட், சாய்தள வசதி உள்ளிட்ட பாதுகாப்பு இனம் உள்ளதா என்ற சிந்தனையே கிடையாது.
ஒரு மாற்றுத்திறனாளியை வீல் சேரோடு மீட்பதில்லை. அப்படியே துாக்கி கொண்டு வந்து முகாம்களில் வைக்கின்றனர்.  2016ல் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2024ல் உள்ளோம். தற்போது வரை தெளிவான முன்னேற்பாடுகள் இல்லை.
இந்த சட்டம் குறித்த பயிற்சி இல்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளில் இருந்து நீதித்துறையினர் வரை பயிற்சி அளிக்க வேண்டும். முதற்கட்டமாக தாசில்தார்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், என்றார்.