/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் தெப்ப திருவிழாவுக்கு முன் திருமுக்குளத்தை சரி செய்ய எதிர்பார்ப்பு

ADDED : பிப் 13, 2024 05:13 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் ஆண்டாள் தெப்ப திருவிழாவுக்கு முன்பு குளத்தை சுற்றியுள்ள கழிவுகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி, தூய்மையான குளத்தை உருவாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
2023 நவ., டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக தற்போது திருமுக்குளத்தில் முழு அளவில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் பிப்ரவரி 24, 25, 26 தேதிகளில் தெப்பத் திருவிழா நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது.
இந்நிலையில் குளத்தின் நான்கு பக்கமும் உள்ள கல்ச்சுவர்கள் சிதைந்தும், படித்துறைகளில் செடி, கொடிகள் வளர்ந்தும், குளத்தில் கழிவுகள் மிதந்தும் அசுத்த நிலையில் காணப்படுகிறது.
எனவே, தெப்பத் திருவிழாவுக்கு முன்பு திருமுக்குளத்தில் கரைகளை சரி செய்தும், கழிவுகளை சுத்தம் செய்தும், தூய்மையான குளமாக மாற்ற கோயில் நிர்வாகம் உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.