/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி கொட்டக்காச்சியேந்தலில் ஊருக்குள் பஸ் வந்து செல்ல எதிர்பார்ப்பு

ADDED : அக் 12, 2025 05:00 AM
நரிக்குடி : நரிக்குடி கொட்டகாச்சியேந்தல் ஊருக்குள் பஸ்கள் வந்து செல்ல வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது.
நரிக்குடி கொட்டகாச்சியேந்தல் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நரிக்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த ஊரிலிருந்து மெயின் ரோட்டிற்கு 1 கி. மீ., தூரம் வரவேண்டும். அந்த வழித்தடத்தில் 6 முறை டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாணவர்கள், வேலைக்கு செல்வபவர்கள் நடந்து செல்ல வேண்டும். அவசரத்திற்கு, மழை நேரங்களில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். ஊருக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
திருவிழா நேரங்களில் மட்டும் ஊருக்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்ற நாட்களில் மெயின் ரோட்டிலே ஏற்றி இறக்கி விடுகின்றனர். விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுவதால், ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூ., முன்னாள் ஒன்றிய செயலாளர் அங்குச்சாமி தலைமையில், ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அதனை சிவகங்கை, அருப்புக்கோட்டை பஸ் டெப்போ அதிகாரிகளிடம் கொடுத்தனர்.