/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு
/
தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு
ADDED : அக் 12, 2025 05:00 AM

ராதாகிருஷ்ணன், : ராஜபாளையம் நகராட்சி தெருவில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு கசிவினால் தண்ணீர் வீணாவதுடன் ரோடும் குண்டும் குழியுமாக மாறி வருவதால் மக்கள் சிரமமப்படுகின்றனர்.
ராஜபாளையம் தென்காசி மெயின் ரோடு அருகே தாண்டல் கந்தசாமி ராஜா தெருவில் ஏற்கனவே தாமிரபரணி குடிநீர் குழாய் பதித்து இரண்டு ஆண்டுகளாகியும் சப்ளை தற்போது வரை சோதனை கட்டத்தில் உள்ளது.
ஒவ்வொரு முறையும் இதன் அழுத்தம் சோதிக்க தண்ணீர் திறந்து விடும் போது ரோட்டில் குழாய் உடைப்பெடுத்து தண்ணீர் வீணாவதுடன் சாலையும் மேடு, பள்ளங்களாக மாறி வாகன போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது.
இதுகுறித்து தனலட்சுமி, புதியதாக அமைக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் குழாய் சப்ளை தொடங்குவதற்காக சோதனை ஓட்டம், அழுத்தம் குறித்து திறப்பின்போது குடிநீர் சாலைகளில் வீணாவதுடன் ரோட்டின் நடுவே உடைபட்டுள்ள குழாய்களில் இருந்து வெளியேறும் குடிநீரால் பேவர் பிளாக் கற்கள் குண்டும் குழியுமாக மாறி விடுகிறது. சொந்த செலவில் சரிசெய்தாலும் மீண்டும் இதே பிரச்னை தொடர்கிறது. பலமுறை இது குறித்து அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.