/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு இல்லை.; .அடிப்படை வசதியின்றி திண்டாட்டம் ரோசல்பட்டி என்.டி.முருகன் நகர் மக்கள் திணறல்
/
ரோடு இல்லை.; .அடிப்படை வசதியின்றி திண்டாட்டம் ரோசல்பட்டி என்.டி.முருகன் நகர் மக்கள் திணறல்
ரோடு இல்லை.; .அடிப்படை வசதியின்றி திண்டாட்டம் ரோசல்பட்டி என்.டி.முருகன் நகர் மக்கள் திணறல்
ரோடு இல்லை.; .அடிப்படை வசதியின்றி திண்டாட்டம் ரோசல்பட்டி என்.டி.முருகன் நகர் மக்கள் திணறல்
ADDED : அக் 12, 2025 05:01 AM
விருதுநகர் : விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி என்.டி.முருகன் நகர் 2வது தெருவில் ரோடு, வாறுகால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள 5 தெருக்களில் 2வது தெருவைத் தவிர அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. 2வது தெரு மண் ரோடாக உள்ளதால் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. தெருவின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றி தரமான ரோடு அமைக்க வேண்டும். மற்ற தெருக்களில் இருபுறமும் வாறுகால் உள்ளது.
2வது தெருவில் ஒருபுறம் மட்டும் உள்ளது. மறுபுறம் உள்ள வீடுகள் சொந்த செலவில் பைப்கள் அமைத்தால், கனரக வாகனங்களால் அவை சேதமடைகின்றன. இதனால் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுதாழ்வான பகுதிகளில் வருகிறது. மற்ற பகுதிகளில் வரவில்லை.
இதனால் ஆழ்துளை தண்ணீரை நம்பியே உள்ளோம். ஊராட்சி குடிநீர் வினியோகம் சரிவர இல்லை.
சுகாதார நலன் கருதி ஒவ்வொரு தெருவிலும் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும். வாறுகால்களில் உள்ள கழிவுகளை 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்கின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு கொசுக்கள் பெருகுகிறது. அன்னை தெரசா தெருவில் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
பாம்பு நடமாட்டம் அதிகம் உள்ளது. தெரு நாய்கள் கடித்து இதுவரை இருவர் பாதிப்படைந்துள்ளனர். தெரு நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரிகள் முறையாக செலுத்தியும் அடிப்படை வசதிகள் இல்லை. ஊராட்சி தலைவரின் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தான் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.