/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாஸ்தா கோயில் வனப்பகுதியில் ட்ரக்கிங் எதிர்பார்ப்பு ; வாய்ப்புகள் இருந்தும் விடுபட்டதால் ஏமாற்றம்
/
சாஸ்தா கோயில் வனப்பகுதியில் ட்ரக்கிங் எதிர்பார்ப்பு ; வாய்ப்புகள் இருந்தும் விடுபட்டதால் ஏமாற்றம்
சாஸ்தா கோயில் வனப்பகுதியில் ட்ரக்கிங் எதிர்பார்ப்பு ; வாய்ப்புகள் இருந்தும் விடுபட்டதால் ஏமாற்றம்
சாஸ்தா கோயில் வனப்பகுதியில் ட்ரக்கிங் எதிர்பார்ப்பு ; வாய்ப்புகள் இருந்தும் விடுபட்டதால் ஏமாற்றம்
ADDED : ஜன 18, 2025 07:21 AM
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 40 வனப்பாதையில் சூழல் சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் செண்பகத் தோப்பில் இருந்து வ.புதுப்பட்டி வரை உள்ள பகுதி மட்டும் இதில் இடம் பெற்றுள்ளது.
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய சாஸ்தா கோயில் வனப்பகுதியும் அறிவிப்பில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அறிவிக்காததால் இதற்கான பரிந்துரைக்கு காத்திருக்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான ட்ரக்கிங் மலைேயற்ற பகுதிகள் இருந்து வந்த நிலையில் காட்டுத்தீ, வன விலங்குகள் எதிர்கொள்ளுதல், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அரசால் முறைப்படுத்தி அறிவிக்கப்பட்டன. இருப்பினும் அறிவிக்கப்பட்ட இடங்கள் குறைவு என கருதப்படுகிறது.
குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் சாஸ்தா கோயில் வனப்பகுதி ஏற்கனவே தகுந்த பாதுகாப்புடன் கண்காணிப்பின் கீழ் இருந்து வருவதுடன் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு முறையான பாதுகாப்புடன் வனப்பகுதியின் தொடக்கம் முதல் அருவி வரை வாகனத்தில் அழைத்துச் சென்று ஆற்றில் நீராடிய பின் மீண்டும் கொண்டு வந்து விடப்படுகிறது.
இதில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவு பொருள்கள் கட்டுப்பாடு உள்ளது.
இது தவிர ஏற்கனவே இங்கு சூழல் சுற்றுலா இருந்து வந்தது. கடந்த சில வருடங்களாக தடைக்குப்பின் அவை புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன.
மாவட்டத்தில் விடுமுறை காலங்களில் இயற்கையை காப்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்புடன் மலையேற்றம் அழைத்துச் சென்று திரும்பவும் நல் வாய்ப்பாக உள்ள சாஸ்தா கோவில் பகுதியை ட்ரக்கிங் அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.