தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சதுரகிரியில் பக்தர்களை அனுமதிக்க எதிர்பார்ப்பு

 சதுரகிரியில் பக்தர்களை அனுமதிக்க எதிர்பார்ப்பு

 சதுரகிரியில் பக்தர்களை அனுமதிக்க எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 19, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆக. 12ல் நடக்கிறது. இந்நாளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆக. 8 முதல் 13 வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இக்கோயிலில் ஆக.10ல் பிரதோஷம், ஆக.11ல் சிவராத்திரி, ஆக.12-ல் ஆடி அமாவாசை வழிபாடு நடக்கிறது.

தற்போது மாதாந்திர அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால் ஆடி அமாவாசை தினத்தன்று பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். அப்போது கூட்ட நெரிசலை தவிர்க்க ஆக. 8 முதல் 13 வரை அதிகாலை 4:00 முதல் மதியம் 2:00 மணி வரை மலையேற அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல் போதிய அளவிற்கு குடிநீர், உணவு, மருத்துவம், தீயணைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என அரசிடம் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us