தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் மனு

 பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் மனு

 பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் மனு


ADDED : ஜூலை 19, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 11:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: 'தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை (டாப்ஸ்) ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த த.வெ.க.. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சிவகாசியில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (டாப்ஸ்) அமல்படுத்தப்படும் என அறிவித்த நிலையில், த.வெ.க., மட்டுமே அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது.

அதன்படி தி.மு.க., அரசு கொண்டு வந்த உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 2003 ஏப்., முதல் ஓய்வு பெற்ற, பணியிடை மரணம் அடைந்த அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.

த.வெ.க., அரசு வெளியிட்டுள்ள அரசாணை 111ல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதால் இடைக்கா ல ஓய்வூதியம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us