/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி-கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் விபத்தை தவிர்க்க மேம்பாலம் கட்ட எதிர்பார்ப்பு

ADDED : பிப் 14, 2025 06:30 AM
காரியாபட்டி: மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச் சாலையில் காரியாபட்டி-கல்குறிச்சி பிரிவு ரோடுகளில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேம்பாலம் கட்ட எதிர்பார்க்கின்றனர்.
மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் காரியாபட்டி-கள்ளிக்குடி பிரிவு ரோடு, கல்குறிச்சி-விருதுநகர் பிரிவு ரோடுகளில் தொடர்ந்து விபத்து நடக்கின்றன. துாரத்தில் வாகனங்கள் வருவது போல் இருந்தாலும் அதி வேகமாக வருவதால், ரோட்டை கடப்பதற்குள் விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் நின்று கவனித்து ரோட்டை கடக்க வேண்டும் என்கிற பொருமை கிடையாது.
சமீபத்தில் கள்ளிக்குடி, கல்குறிச்சி பிரிவு ரோட்டில் பலர் விபத்துக்குள்ளாகி, இறந்த சம்பவங்களும் உண்டு. காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டிலும் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் ரோட்டை கடக்க முயன்ற கல்லூரி மாணவர் பஸ் மீது மோதி துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். ஒரு மாதத்தில் 8 விபத்துக்கள் நடந்தது.
மதுரை, கள்ளிக்குடி, வையம்பட்டி வழியாக செல்லும் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள்ரோட்டை கடக்கும் போது அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் பலர் பலியாவதற்கு முன் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.