/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெற்காற்றில் புழக்க நீருக்கான தொட்டி அமைக்க எதிர்பார்ப்பு
/
தெற்காற்றில் புழக்க நீருக்கான தொட்டி அமைக்க எதிர்பார்ப்பு
தெற்காற்றில் புழக்க நீருக்கான தொட்டி அமைக்க எதிர்பார்ப்பு
தெற்காற்றில் புழக்க நீருக்கான தொட்டி அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 13, 2025 11:56 PM
காரியாபட்டி: காரியாபட்டி பணிக்கனேந்தல் தெற்காறு பகுதியில் புழக்க தேவைக்காக தரைதள தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட செவல்பட்டி, பஜார், முக்குரோடு, என்.ஜி.ஓ.,நகர், பள்ளத்துப்பட்டி, அச்சம்பட்டி பகுதிகளில் நடக்கும் கோயில் திருவிழாவின் போது கரகம் எடுத்து, முளைப்பாரி போடுகின்றனர்.
பொதுவாக கரகம், முளைப்பாரி எடுத்து, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். தெற்காற்றில் முன்பு நீர்வரத்து இருந்தது. தற்போது மழை நேரத்தில் கூட சரி வர ஆற்றில் வரத்து இல்லை. அருகில் உள்ள ஊருணிகளிலும் தண்ணீர் நிரம்ப வாய்ப்பு கிடையாது.
அப்படியே நிரம்பினாலும் சாக்கடை கழிவுநீர் கலந்திருக்கும். அருவறுப்பாக இருப்பதால் பக்தர்கள் நீர் நிலைகளில் புழங்க தயங்குகின்றனர். திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நீர் தேவைப்படுகிறது. மேலும் பணிக்கனேந்தல் மக்கள் புழக்கத்திற்கான தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர். அருகில் மயானம் இருப்பதால் இறுதிச் சடங்கு செய்ய குடங்களில் சுமந்து செல்கின்றனர்.
எனவே புழக்கத்திற்கான தேவையை கருத்தில் கொண்டு தெற்காறு கரையோரம் தரைதள தொட்டி அமைத்து தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.