/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடிந்து விழும் நிலையில் மாணவர் விடுதி அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
/
இடிந்து விழும் நிலையில் மாணவர் விடுதி அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
இடிந்து விழும் நிலையில் மாணவர் விடுதி அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
இடிந்து விழும் நிலையில் மாணவர் விடுதி அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜன 06, 2026 05:50 AM

காரியாபட்டி: காரியாபட்டியில் மாணவர் விடுதி இடிந்து விழும் நிலையில் உள்ளதால், விபத்திற்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டியில் ஜெ.ஜெ. காலனி அருகே 15 ஆண்டுகளுக்கு முன் மாணவர் விடுதி கட்டப்பட்டது. ஆங்காங்கே பள்ளிகள் அதிகரித்ததால் தங்கி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
அந்த விடுதியில் குறைந்த அளவு மாணவர்களே தங்கி படித்தனர். நாளடைவில் கட்டடம் சேதம் அடைந்து, சரிவர பராமரிக்கப்படவில்லை. போதிய மாணவர்களும் இல்லாததால் சில ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்டது. தற்போது கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்து, எப்போது இடிந்து விழுமோ என்கிற சூழ்நிலை உள்ளது. திறந்த வெளியாக இருப்பதால் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. தளவாட பொருட்களும் காணாமல் போகின்றன. ஆடு, மாடுகள் சுற்றி திரிவதுடன், சிறுவர்கள் விளையாடுகின்றனர். ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. விபத்திற்கு முன் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.