/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மலையடிவார சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
மலையடிவார சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
மலையடிவார சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
மலையடிவார சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 06, 2025 07:24 AM
ராஜபாளையம் : மாணவர்களுக்கு விடுமுறை தொடங்க உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி பகுதிகளை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள நிலையில் இவற்றை நாடிவரும் மக்களுக்கு எதிர்பார்க்கும் அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை.
விடுமுறை காலங்களில் குடும்பத்தினரோடு சுற்றுலா அழைத்துச் செல்ல பசுமை போர்த்தி ஓங்கி உயர்ந்த மலைகள், நீர்நிலைகள் உள்ள பகுதிகளாக ராஜபாளையம் அய்யனார் கோயில், தேவதானம் சாஸ்தா கோயில், ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு, தாணிப் பாறை பகுதிகளில் நீர் நிலைகளோடு ஒட்டிய வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளன.
இப்பகுதிகளுக்கு சென்று வர போக்குவரத்து, உடைமாற்றும் வசதி போன்ற அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்படவில்லை. கேரளாவில் மலையோர பகுதிகளில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் சுற்றுலா தலங்கள் நீர் நிலைகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.