/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடியில் தொடரும் விபத்துக்களை தவிர்க்க டிவைடர் அமைக்க எதிர்பார்ப்பு

ADDED : பிப் 05, 2025 11:57 PM
நரிக்குடி; நரிக்குடி வழியாக அருப்புக்கோட்டை பார்த்திபனுாருக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. நரிக்குடியில் எப்போதும் நெருக்கடியான சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் ரோட்டோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் ரோடு வரை ஆக்கிரமித்துள்ளனர். இரு வாகனங்கள் விலகிச் செல்வதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆட்களோ மற்ற வாகனங்களோ விலகிச் செல்ல போதிய இட வசதி இல்லை.
இதில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டில் நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. விபத்தை தடுக்க ரோட்டோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ரோடை அகலப்படுத்தி டிவைடர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.