/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான பழைய கட்டடங்களை அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
/
சேதமான பழைய கட்டடங்களை அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
சேதமான பழைய கட்டடங்களை அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
சேதமான பழைய கட்டடங்களை அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜன 30, 2025 04:58 AM

நரிக்குடி: நரிக்குடியில் பயன்பாடு இன்றி கிடக்கும் பழைய கட்டடங்களை, விபத்திற்கு முன் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி வீரசோழனில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குழந்தைகள் மையம், கூட்டுறவு கட்டடங்கள் சேதமடைந்து பயன்பாடு இன்றி கிடக்கிறது. குழந்தைகள் மைய கட்டடத்தில் போடப்பட்ட சிமென்ட் சீட்டிலான கூரை ஆங்காங்கே உடைந்து விழுந்தது. இதனால் குழந்தைகள் மையம் மாற்று இடத்தில் செயல்பட்டு வருகிறது. பழைய கட்டடத்தில் தூசி படிந்து, குப்பை நிறைந்து காணப்படுகிறது. கூரை ஓடு உடைந்து மக்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது.
அதேபோல் கூட்டுறவு கட்டடங்கள் சேதமடைந்து ஆங்காங்கே சிமென்ட் கலவை பெயர்ந்து விழுகிறது. விபத்து ஏற்படுவதற்கு முன் பயன்பாடு இன்றி கிடக்கும் பழைய கட்டடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.