/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் கிராமங்களில் சேதமடைந்த சிறுவர் பூங்காக்களை சீரமைக்க எதிர்பார்ப்பு

ADDED : ஏப் 27, 2025 07:14 AM
சாத்துார் : சாத்துார்ஊராட்சி ஒன்றிய் கிராமங்களில் சேதமடைந்த நிலையில் உள்ள சிறுவர் பூங்காக்களை சீரமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த காலங்களில் சிறுவர்கள் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்காக ஊராட்சிகள் தோறும் சிறுவர் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தப் பூங்காக்களில் சீசா,ஊஞ்சல்,சறுக்கு மேடை,சதுரங்க பார் கம்பி, ராட்டினங்கள் என பல்வேறு விளையாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தது. காலப்போக்கில் இந்த பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் உபகரணங்கள் சேதமடைந்து உடைந்து விட்டன.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது .பள்ளிகளும் விடுமுறை விட துவங்கி உள்ளன.இந்த நிலையில் ஊராட்சிகளில் பொழுதுபோக்கு இடங்களாக இருந்த சிறுவர் பூங்காக்களில் உபகரணங்கள் சேதம் அடைந்து காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடி மகிழ இடமின்றி அவதிப்படும் நிலை உள்ளது.
சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் ஊராட்சிகள் தோறும் சேதமடைந்த நிலையில் உள்ள சிறுவர் பூங்காக்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.