/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த ரோடு சீரமைக்க எதிர்பார்ப்பு
/
சேதமடைந்த ரோடு சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 03, 2025 12:32 AM
வத்திராயிருப்பு: கூமாபட்டி கொடிக்குளம் கிழவன் கோயில் பகுதியில் சேதம் அடைந்துள்ள ரோட்டினை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி, கொடிக்குளம், கிழவன் கோயில் வழியாக பிளவக்கல் பெரியார் அணைக்கு சுமார் 13 கி.மீ., துாரத்திற்கு தார் ரோடு உள்ளது. இதில் கிழவன் கோயில் குடியிருப்பு பகுதியில் உள்ள தார் ரோடு அரிக்கப்பட்டு, சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இதனால் விவசாய தொழிலாளர்கள் வாகனங்களில் செல்வதில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். அணைக்கு செல்லும் அரசு பஸ்கள் கூட தடுமாறி தான் சென்று வருகிறது. எனவே கூமாபட்டியில் இருந்து பிளவக்கல் அணை வரை, ரோட்டினை அகலப்படுத்தி புதிதாக அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.