/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் முக்கிய சந்திப்புகளில் குவி ஆடிக் கண்ணாடி அமைக்க எதிர்பார்ப்பு
/
சாத்துாரில் முக்கிய சந்திப்புகளில் குவி ஆடிக் கண்ணாடி அமைக்க எதிர்பார்ப்பு
சாத்துாரில் முக்கிய சந்திப்புகளில் குவி ஆடிக் கண்ணாடி அமைக்க எதிர்பார்ப்பு
சாத்துாரில் முக்கிய சந்திப்புகளில் குவி ஆடிக் கண்ணாடி அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 23, 2024 04:30 AM
சாத்துார்: சாத்துார் மெயின்ரோட்டில் முக்கிய சந்திப்புகளில் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் குவி ஆடி கண்ணாடிகள் பொறுத்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார் மெயின்ரோட்டில் முக்குராந்தல் பகுதி நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இருக்கன்குடி - நென்மேனி ரோடு, வடக்குரத வீதி ரோடு, மெயின்ரோடு, மேற்கு ரத வீதி ரோடு ஆகியவை சந்திக்கும் பகுதியாக உள்ளது.
இருக்கன்குடி - நென்மேனி ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு வரும் வாகனங்கள் முக்குராந்தல் பகுதியில் வலது புறமாக திரும்பி மெயின் ரோட்டிற்கு வரவேண்டிய நிலை உள்ளது.
இதே போன்று காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகள் காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று விட்டு வடக்கு ரத வீதி வழியாக மெயின் ரோட்டுக்கு வருகின்றன. இதன் காரணமாக நான்கு புறத்தில் இருந்தும் வாகனங்கள் வந்து திரும்பும் போது எதிரில் வரும் வாகனங்கள் காண்பதற்காக இந்த பகுதியில் குவி ஆடி கண்ணாடிகள் வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கண்ணாடிகள் மாயமாகின. இதே போன்று மெயின் ரோட்டில் மதுரை பஸ் ஸ்டாப் எதிரில் வெம்பக்கோட்டை ரோடு சந்திக்கும் இடத்திலும் ஒரு குவி ஆடி கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது இந்த இரு கண்ணாடிகளும் தற்போது மாயமாகிவிட்டன.
இதன் காரணமாக இந்தப் பகுதியில் வேகமாக வந்து திரும்பும் வாகனங்கள் எதிரில் திரும்பும் வாகனங்களோடு மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்று வாகனங்களை காலை, மாலை நேரங்களில் மட்டும் ஒழுங்கு படுத்துகின்றனர்.
மற்ற நேரங்களில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்களை காண முடியாமல் அவசர கதியில் திரும்பும் போது நேருக்கு நேர் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. மாயமான குவி ஆடி கண்ணாடிகளை மீண்டும் இந்த பகுதியில் பொருத்துவதன் மூலம் விபத்துக்கள் குறையும்.
இதனால் வாகன ஓட்டிகளும் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டிச் செல்ல வழி வகை பிறக்கும். போக்குவரத்து போலீசார் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

