/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க எதிர்பார்ப்பு
/
வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க எதிர்பார்ப்பு
வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க எதிர்பார்ப்பு
வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 16, 2025 06:41 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் நெல் அறுவடை விரைவில் துவங்க உள்ளதால் கூமாபட்டி, கான்சாபுரம், வத்திராயிருப்பு, தம்பிபட்டி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் உடனே திறக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
வத்திராயிருப்பு தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான அத்தி கோயில், கான்சாபுரம், பிளவக்கள் பெரியாறு அணை, கோவிலாறு அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், கொடிக்குளம், வத்திராயிருப்பு, புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், தம்பி பட்டி, மகாராஜபுரம், தாணிப்பாறை உட்பட பல்வேறு கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது.
தற்போது சம்பா சாகுபடி துவங்கி நெற்கதிகள் நன்றாக வளர்ந்துள்ள நிலையில் விரைவில் அறுவடை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்மணிகளை சேமித்து வைக்க நெற்களஞ்சியங்கள் இல்லாததால் அறுவடை செய்த நெல்லை ரோட்டில் கொட்டி உணர்த்தும் நிலை உள்ளது. தற்போதைய குளிரிலும், மழையிலும் நெற்கதிர்கள் பாதிக்கப்படலாம் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே, காலதாமதம் இல்லாமல் முன்கூட்டியே சரியான திட்டமிடுதலுடன் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, தம்பிபட்டி உட்பட பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

