/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிழற்குடையில் பொங்கிய தண்ணீர் திறந்த இரண்டே நாளில் 'சோதனை'
/
நிழற்குடையில் பொங்கிய தண்ணீர் திறந்த இரண்டே நாளில் 'சோதனை'
நிழற்குடையில் பொங்கிய தண்ணீர் திறந்த இரண்டே நாளில் 'சோதனை'
நிழற்குடையில் பொங்கிய தண்ணீர் திறந்த இரண்டே நாளில் 'சோதனை'
ADDED : பிப் 14, 2024 02:04 AM

நரிக்குடி:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மறையூரில் நிழற்குடை திறந்த இரண்டே நாளில் குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் பொங்கி வெளியேறியது.
நரிக்குடி மறையூரில் எம்.எல்.ஏ.,நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் கண்மாய் கரையில் நிழற்குடை கட்டப்பட்டது.
தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரின் கணவரான இசலி ரமேஷ் பணிகளை மேற்கொண்டார். இந்த இடத்தின் கீழ் தாமிரபரணி குடிநீர் குழாய் செல்வதால் அங்கு கட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இருந்தும் அந்த இடத்தில் நிழற்குடை கட்டப்பட்டு பிப்.11ல் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
நேற்று காலை கட்டடத்தின் பாரம் தாங்காமல் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தரை தளத்தின் வழியாக தண்ணீர் பொங்கி வெளியேறியது.
கட்டடத்தின் அடியில் குழாய் உடைந்துள்ளதால் தரைதளத்தை உடைத்து தான் சரி செய்ய முடியும். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ. 6 லட்சம் வீணாகியுள்ளது.