/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீதிமன்ற வளாகத்தில் காலாவதி தீயணைப்பான்கள்
/
நீதிமன்ற வளாகத்தில் காலாவதி தீயணைப்பான்கள்
ADDED : ஏப் 13, 2025 03:55 AM

விருதுநகர் : விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் காலாவதியான தீயணைப்பான்களை புதுப்பிக்க தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் 2022லேயே தீயணைப்பான்கள் காலாவதியாகி விட்டன. 3 ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள், பெரும் வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் ஆகிய பகுதிகளில் தியணைப்பான்கள் கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இவை ஏ, பி, சி, சி.ஓ2., என நான்கு வகைப்படும்.
கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலும் 'சி' வகை தீயணைப்பான்கள் உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் ஏபிசி., வகை தீயணைப்பான்கள் உள்ளன. இதை ஆண்டிற்கு ஒரு முறை 'ரீபில்' செய்ய வேண்டும். ஆனால் இங்கு உள்ள தீயணைப்பான்கள் ரீபில் செய்யப்படாமல் உள்ளன. அதன் வீரியத்தன்மையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. தீயணைப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக காலாவதி தீயணைப்பான்களை ரீபில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

