ADDED : மார் 31, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் சிறு தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் கிருஷ்ணா செர்பண்ட் பேக்டரி பட்டாசு ஆலை உள்ளது.
இங்குள்ள ஒரு அறையில் பாம்பு மாத்திரை வெடிகள் தயாரிக்கும் போது திடீரென தீப்பற்றியது. இதில் ரூ.20000 மதிப்பிலான பாம்பு மாத்திரை வெடிகள் எரிந்தன. தொழிலாளர்களே உடனடியாக தீயை அணைத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.