தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வெடி தயாரித்த வழக்கு: நா.த.க., வேட்பாளர் சேர்ப்பு

 வெடி தயாரித்த வழக்கு: நா.த.க., வேட்பாளர் சேர்ப்பு

 வெடி தயாரித்த வழக்கு: நா.த.க., வேட்பாளர் சேர்ப்பு


ADDED : பிப் 25, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அனுமதியின்றி வெடி தயாரித்ததாக பதியப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்துார் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சேது நாராயணபுரத்தில் அனுமதியின்றி வெடி தயாரித்த சிவகாசியை சேர்ந்த ஜெயலட்சுமி 34, பழனி செல்வம் 42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ சல்பர், 30 கிலோ கரி துாள், வெடி மருந்து திரி, ஆயில்கேன், நுால் கண்டு, திரி செய்ய பயன்படுத்திய மிஷின் பறிமுதல் செய்யப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

வெடி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இடம் ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கரிகால பாண்டியனின் உறவினருக்கு சொந்தமானது.

இடத்தை அவரே பராமரித்து வருகிறார். ஜெயலட்சுமியின் கணவர் தமிழரசனும் வெடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் எனத்தெரிந்தது. இதையடுத்து கரிகால பாண்டியன், தமிழரசன் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us